Advertisement

பிஎஸ்எல் 2022: ரிஸ்வான் அதிரடியில் முல்தான் சுல்தான்ஸ் வெற்றி!

பிஎஸ்எல் 2022: கராச்சி கிங்ஸிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Advertisement
PSL: Rizwan's 76 earns Multan seventh win as Karachi's losing streak continues
PSL: Rizwan's 76 earns Multan seventh win as Karachi's losing streak continues (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Feb 17, 2022 • 12:49 PM

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 23ஆவது லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் - முல்தான் சுல்தான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

Bharathi Kannan
By Bharathi Kannan
February 17, 2022 • 12:49 PM

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கராச்சி கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஜோ கிளார்க் 40 ரன்களை சேர்த்தார்.

இதையடுத்து இலக்கை துரத்திய முல்தான் சுல்தான்ஸ் அணிக்கு ஷான் மசூத் - முகமது ரிஸ்வான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். 

இதில் அதிரடியாக விளையாடிய ஷான் மசூத் 45 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்த முகமது ரிஸ்வான் அரைசதம் கடந்தார்.

இதனால் 19.3 ஓவர்களில் முல்தான் சுல்தான்ஸ் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் கராச்சி கிங்ஸை வீழ்த்தியது. இப்போட்டியில் 76 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவிய முகமது ரிஸ்வான் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement
வீடு Special Live Cricket Video Sports