Advertisement

பிஎஸ்எல் 2021: விதிகளை மீறியதாக தொடரிலிருந்து வெளியேற்றப்பட்ட இருவர்!

பயோ பபுள் சூழலிளிருந்து வெளியேறி ரசிகர்களைச் சந்தித்ததாக பெஸ்வர் ஸால்மி அணியின் ஹைதர் அலி, உமைத் ஆசிப் ஆகியோர் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 

Bharathi Kannan
By Bharathi Kannan June 24, 2021 • 20:06 PM
PSL: Suspensions For Peshawar Zalmi's Umaid Asif, Haider Ali
PSL: Suspensions For Peshawar Zalmi's Umaid Asif, Haider Ali (Image Source: Google)
Advertisement

அபுதாபியில் நடைபெற்று வரும் பிஎஸ்எல் தொடர் தற்போது இறுதி கட்டத்த எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் பெஸ்வர் ஸால்மி - முல்தான் சுல்தான்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

மேலும் இத்தொடரில் பங்கேற்று வரும் வீரர்கள், அணி ஊழியர்கள் என அனைவரும் கடுமையான பயோ பபுள் சூழலிற்கு உட்படுத்தபட்டு, போட்டிகளில் விளையாடி வருகின்றனர். 

Trending


இந்நிலையில் பயோ பபுள் சூழலிளிருந்து வெளியேறி ரசிகர்களைச் சந்தித்ததாக பெஸ்வர் ஸால்மி அணியின் ஹைதர் அலி, உமைத் ஆசிப் ஆகியோர் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து பிசிபி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெஸ்வர் ஸால்மி அணியின் ஹைதர் அலி, உமைத் ஆசிப் ஆகியோர் நேற்றைய தினம் பயோ பபுள் விதிகளை மீறி ரசிகர்களைச் சந்தித்தாக புகார் எழுந்தது. இதையடுத்து இன்று அதிகாலை  கோவிட் -19 மேலாண்மைக் குழு பாரிஸ்டர் சல்மான் நசீர், பாபர் ஹமீத் ஆகியோர் அடங்கிய குழு இருவரையும் தொடரிலிருந்து வெளியேற்றுவதாக முடிவு செய்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.

இதையடுத்து அவர்கள் இருவரும் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தொடர்களிலிருந்து வெளியேறுவதாகவும் அறிவித்துள்ளனர். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement