Advertisement

பிஎஸ்எல் 2022: இஸ்லாமாபாத்தை பந்தாடியது பெஷ்வர் ஸால்மி!

பிஎஸ்எல் 2022: இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் பெஷ்வர் ஸால்மி அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Bharathi Kannan
By Bharathi Kannan February 18, 2022 • 11:52 AM
PSL: Zalmi overcome Azam's belligerent 85 to secure two crucial points
PSL: Zalmi overcome Azam's belligerent 85 to secure two crucial points (Image Source: Google)
Advertisement

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 24ஆவது லீக் ஆட்டத்தில் பெஷ்வர் ஸால்மி - இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெஷ்வர் ஸால்மி அணி முகமது ஹாரிஸின் அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்களைச் சேர்த்தனர். 

Trending


இதில் அதிகபட்சமாக முகமது ஹாரிஸ் 70 ரன்களைச் சேர்த்தார். இஸ்லாமாபாத் அணி தரப்பில் ஃபஹீம் அஷ்ரஃப் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து இலக்கை துரத்திய இஸ்லாமாபாத் அணிக்கு ஆசாம் கான் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார். இதனால் இஸ்லாமாபாத் எளிதில் வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.

ஆனால் 85 ரன்களில் ஆசாம் கான் ஆட்டமிழக்க, 20 ஓவர்கள் முடிவில் இஸ்லாமாபாத் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களை மட்டுமே சேர்த்தது. 

இதன்மூலம் பெஷ்வர் ஸால்மி அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement