
இந்தியாவின் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பாஞ்சாப் மற்றும் பரோடா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மொஹாலியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பரோடா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு சரியான தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் தொடக்க வீரர்கள் அபிஷேக் சர்மா, பிரப்ஷிம்ரான் சிங் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். அதன்பின் இணைந்த அன்மோல்ப்ரீத் சிங் - கேப்டன் மந்தீப் சிங் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் மந்தீப் சிங் 32 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்க, மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் சதமடித்து அசத்திய அன்மோல்ப்ரீத் சிங் 10 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 113 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய நேஹல் வதேரா அதிரடியாக விளையாடி 61 ரன்களைச் சேர்த்ததன் மூலம் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்களை எடுத்தது.