Punjab Kings batter Shikhar Dhawan kicked, slapped by his father- WATCH VIDEO (Image Source: Google)
பஞ்சாப் அணிக்காக நடப்பு ஐபிஎல் சீசனில் விளையாடிய ஷிகர் தவான், 14 போட்டியில் களமிறங்கி 460 ரன்கள் அடித்துள்ளார்.
ஆனால், பஞ்சாப் அணி இம்முறை பிளே ஆப் சுற்றுக்கு செல்லவில்லை. மேலும், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய தொடரும் அறிவிக்கப்பட்டது.
இதிலும் ஷிகர் தவான் இடம்பெறவில்லை. ரோஹித் இல்லாத நிலையில் தவானுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 460 ரன்கள் அடித்தும் தவானை இந்திய அணியில் தேர்வுக்குழுவினர் சேர்க்கவில்லை. தினேஷ் கார்த்திக்கால் கம்பேக் கொடுக்கும் போது ஏன் தவானுக்கு வாய்ப்பு தரவில்லை என்று சுரேண் ரெய்னாவும் கருத்து தெரிவித்து இருந்தார்.