
ஐபிஎல் தொடரில் இதுவரை 15 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. இதில் மும்பை இந்தியன்ஸ் 5, சிஎஸ்கே 4 முறை என கோப்பைகளை கைப்பற்றி வரும் நிலையில், ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிடள்ஸ் ஆகிய அணிகள் ஐபிஎல் தொடங்கியதிலிருந்து விளையாடினாலும் ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியாமல் திணறிவருகின்றன.
ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ஒவ்வொரு சீசனிலும் கோப்பையை வெல்லும் முனைப்பில் நிறைய மாற்றங்கள் செய்துவருகின்றன. அணி வீரர்கள், காம்பினேஷனில் மட்டுமல்லாது பயிற்சியாளர்களையும் தொடர்ச்சியாக மாற்றிவருகின்றனர். ஆனால் எதிர்பார்க்கும் ரிசல்ட் மட்டும் கிடைக்கவில்லை.
பஞ்சாப் கிங்ஸ் அணியில் சேவாக்கிற்கு அடுத்து தலைமை பயிற்சியாளர் பதவியை ஏற்றவர் அனில் கும்ப்ளே. இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சுழல் ஜாம்பவானுமான அனில் கும்ப்ளே, 3 சீசன்களாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்துவந்தார்.