Advertisement

கேப்டன்சி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளிவைத்த பஞ்சாப் கிங்ஸ்!

பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனை மாற்றுவது தொடர்பான சர்ச்சை குறித்து அந்த அணி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. 

Advertisement
Punjab Kings Quash Rumors On Possible Captaincy Changes To The Side In IPL
Punjab Kings Quash Rumors On Possible Captaincy Changes To The Side In IPL (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 24, 2022 • 03:39 PM

கடந்த 2021ஆம் ஆண்டில் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த கேஎல் ராகுல் இந்த வருடம் லக்னோ சூப்பர் ஜெயன்ர்ஸ் அணியில் இடம்பெற்று அந்த அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். இதனால் பஞ்சாப் அணியின் புதிய கேப்டனாக மயங்க் அகர்வால் தேர்வானார். 

Bharathi Kannan
By Bharathi Kannan
August 24, 2022 • 03:39 PM

எனினும் 2022 ஐபிஎல் போட்டியிலும் பஞ்சாப் அணி லீக் சுற்றின் முடிவில் 6ஆம் இடத்தையே பிடித்தது. 2019, 2020, 2021, 2022 என கடந்த நான்கு ஆண்டுகளிலும் பஞ்சாப் கிங்ஸ் அணி 6ஆம் இடத்டையே பிடித்தது. ஐபிஎல் போட்டியில் இருமுறை மட்டுமே பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுள்ளது.  

Trending

இதையடுத்து பயிற்சியாளர் கும்ப்ளேவை நீக்கிவிட்டு புதிய பயிற்சியாளருக்கான தேடலில் பஞ்சாப் அணி நிர்வாகம் உள்ளதாகக் கடந்த வாரம் செய்திகள் வெளியாகின. அடுத்ததாக, இந்த வருடம் கேப்டனாக இருந்த மயங்க் அகர்வாலையும் நீக்கிவிட்டு ஜானி பேர்ஸ்டோவ்வைப் புதிய கேப்டனாக நியமிக்கவுள்ளதாகவும் செய்தி வெளியானது. இதையடுத்து இந்த சர்ச்சை குறித்து பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

ஒரு விளையாட்டு இணையத்தளத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவி குறித்து செய்தி வெளியாகியுள்ளது. எங்கள் அணியைச் சேர்ந்த எந்தவொரு நிர்வாகியும் யாருக்கும் இதுகுறித்து பேட்டியளிக்கவில்லை என்று பஞ்சாப் கிங்ஸ் அணி தகவல் தெரிவித்துள்ளது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement