
Qualification pathway for 14-team 2027 men's ODI World Cup approved (Image Source: Google)
வருகிற 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடரை தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்தொடரில் தரவரிசையில் அடிப்படையில் 10 அணிகள் நேரடியாகப் பங்குபெறும். உலக அளவிலான தகுதிச்சுற்றின் அடிப்படையில் மேலும் 4 அணிகள் ஒருநாள் உலகக் கோப்பையில் பங்கேற்கும்.
இதன்மூலம் 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் தொடரில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 14 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற ஐசிசி கூட்டத்தின் முடிவில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.