
ராஜ்கோட்டி நடைபெற்று வரும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி வெற்றியை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 353 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது நிலையில், அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணி 307 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன்மூலம் 46 ரன்கள் முன்னிலையும் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து அணியில் ஸாக் கிரௌலி 60 ரன்களையும், ஜானி பேர்ஸ்டோவ் 30 ரன்களையும் சேர்த்ததை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் அஸ்வின் மற்றும் குல்தீப் யாதவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் அந்த அணி 145 ரன்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.
இந்திய அணி தரப்பி அபாரமாக பந்துவீசிய ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனால் இந்திய அணிக்கு 192 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதன்பின் இலக்கை துரத்தி வரும் இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்களைச் சேர்த்துள்ளது.