
தோனி தலைமையிலான இந்திய அணியில் முதன்மை ஸ்பின்னராகவும், நட்சத்திர வீரராகவும் கோலோச்சியவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின். இந்திய அணிக்காக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய அனைத்து ஃபார்மட்டுகளிலும் அபாரமாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிகளை பெற்று கொடுத்திருக்கிறார்.
விராட் கோலி கேப்டன் பொறுப்பேற்ற பின்னர், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான அணியிலிருந்து அஸ்வினை ஓரங்கட்டிவிட்டு, ரிஸ்ட் ஸ்பின்னர்களான குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சாஹலுக்கு முன்னுரிமை கொடுத்தார். அதனால் அஷ்வின் 2017ஆம் ஆண்டுக்கு பிறகு, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார்.
இந்நிலையில், ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகளில் அஸ்வின் சிறப்பாக பந்துவீசினால், டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறலாம் என்று முன்னாள் வீரர் லக்ஷ்மண் சிவராம கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.