
Rabada, Nortje arrive at DC's team hotel (Image Source: Google)
கிரிக்கெட் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்து வரும் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் இன்னும் சில நாள்களில் தொடங்கவுள்ளது. இத்தொடரில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவிற்கு படையெடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடிவரும் ஆண்ட்ரிச் நோர்ட்ஜே, காகிசோ ரபாடா ஆகியோர் இன்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் இணைந்துள்ளனர்.
இதுகுறித்து அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறுகையில், "அணியின் அனைத்து வீரர்களும் தற்போது பயிற்சியில் இணைந்துள்ளதால், இந்தாண்டு ஐபிஎல் தொடரை நிச்சயம் நாங்கள் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.