
நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதி போட்டியானது லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திரா மற்றும் அனுபவ வீரர் கேன் வில்லியம்சன் ஆகியோர் சதமடித்து அசத்தினர். இதில் ரச்சின் ரவீந்திரா 108 ரன்களையும், கேன் வில்லியம்சன் 102 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களில் டேரில் மிட்செல் மற்றும் கிளென் பிலீப்ஸ் ஆகியோர் தலா 49 ரன்களைச் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதன்மூலம் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 362 ரன்களைச் சேர்த்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் லுங்கி இங்கிடி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து தென் ஆப்பிரிக்க அணி இமாலய இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் நியூசிலாந்து அணி வீரர் ரச்சின் ரவிந்திரா சதமடித்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைத்துள்ளார்.