Advertisement

ரச்சின் ரவீந்திராவை பாராட்டிய அனில் கும்ப்ளே!

இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் சதமடித்து அசத்திய நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவை இந்திய ஜாம்பவான் அனில் கும்ப்ளே பாராட்டியுள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan October 06, 2023 • 13:53 PM
ரச்சின் ரவீந்திராவை பாராட்டிய அனில் கும்ப்ளே!
ரச்சின் ரவீந்திராவை பாராட்டிய அனில் கும்ப்ளே! (Image Source: Google)
Advertisement

இங்கிலாந்து எதிரான ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி அசாத்திய செயல்பாட்டை வெளிப்படுத்தி வென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இந்தப் போட்டியில் 283 ரன்கள் இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு 23 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இடது கை இளம் பேட்ஸ்மேன் ரச்சின் ரவீந்தரா 82 பந்துகளில் அதிரடி சதம் அடித்து அசத்தினார்.

இவர் ஆரம்பித்த விதம் இங்கிலாந்து அணியின் நம்பிக்கையை உடைப்பதாக அமைந்தது. கான்வே 152 ரன்கள் குவித்த போதும் இவருக்கே இதனால் ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது. அறிமுக உலகக் கோப்பை போட்டியில் சதம் அடித்ததோடு ஆட்டநாயகன் விருதையும் வென்று அசத்தியிருக்கிறார். மேலும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஹைதராபாத்தில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் துவக்க வீரராக அனுப்பப்பட்ட இவர் அந்த வாய்ப்பை மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு 97 ரன்கள் குவித்து மிரட்டினார். 

Trending


நேற்று கேன் வில்லியம்சன் விளையாட முடியாத காரணத்தினால் இவருக்கு மூன்றாவது இடத்தில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பையும் மிக அழகாக கைப்பற்றி இருக்கிறார். இவரது தந்தை சென்னையில் லீக் போட்டிகளில் விளையாடியவர் என்கின்ற தகவல் கிடைக்கிறது. பிறகு இவர்கள் நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்து, ரச்சின் ரவீந்தரா நியூசிலாந்துக்காக உள்நாட்டு போட்டிகளில் வெலிங்டன் அணிக்காக விளையாடி, நியூசிலாந்து தேசிய அணியில் தற்போது இடம் பிடித்து அசத்தியிருக்கிறார்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் வீரர் அனில் கும்ப்ளே இவரைப் பற்றி கூறும் பொழுது “பாகிஸ்தானுக்கு எதிராக பயிற்சி ஆட்டத்தில் அவர் பேட்டி துவங்கிய பொழுது அவர் எவ்வளவு திறமையானவர் என்பதை நாம் பார்த்தோம். ஆனால் உலக கோப்பையின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனுக்கு எதிராக அவர் விளையாடிய விதம் மிக அபாரமான ஒன்று. இது மிகச் சிறந்த இன்னிங்ஸ். இவரைப் பார்ப்பதற்கு நமது யுவராஜ் சிங்கை இளம் வயதில் பார்த்தது போலவே இருக்கிறது. இவர் மிகவும் நேர்த்தியானவர், அபாரமானவர்” என்று பாராட்டியுள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement