பென் ஸ்டோக்ஸை எப்படி பயன்படுத்தப் போகிறார் என்பது தோனிக்கு மட்டுமே தெரியும் - ரஹானே!
கேப்டன் தோனி பென் ஸ்டோக்ஸை எப்படி பயன்படுத்தப் போகிறார் என்பதை அனைவரும் இன்று பார்க்க போகிறீகள். அது தோனிக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் என அஜிங்கியா ரஹானே தெரிவித்துள்ளார்.
2018 மற்றும் 2021 ஆகிய சீசன்களில் கற்பனைக்கும் எட்டாத கம்பேக் கொடுத்து அசத்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அப்படியான சம்பவம் மீண்டும் நிகழும், அதுவும் தோனிக்காக அவரது தலைமையில் கீழ் மீண்டும் நிகழும் என்று சென்னை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். வயதாகிவிட்டது, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டார், மைதானத்தை பார்த்து எத்தனை நாட்களாகிவிட்டதோ என்று பேசியவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் வந்து இறங்கி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளார்.
2018ஆம் ஆண்டு எப்படியான பாசிட்டிவாக சென்னை அணி காணப்பட்டதோ, அப்படியான சூழலில் மீண்டும் தோனியும், சிஎஸ்கே-யும் இருப்பதாக தெரிகிறது. அதற்கேற்க சென்னை அணி மினி ஏலத்தில் பென் ஸ்டோக்ஸ், பேக் அப் ஒப்பனராக ரஹானே உள்ளிட்டோரை ஏலத்தில் வாங்கி நம்பிக்கையாக உள்ளது.
Trending
பென் ஸ்டோக்ஸ்-ஐ வாங்கியதன் மூலம், சென்னை அணியின் மிடில் ஆர்டர் அதிரடியின் உச்சத்தில் இருக்கிறது. ராயுடு, ஸ்டோக்ஸ், ஜடேஜா, தோனி என்று பார்ப்பதற்கே மெர்சலாக உள்ளது. இன்னும் தேவையென்றால் தீபக் சஹரையும் ஆல் ரவுண்டர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் காயம் காரணமாக பென் ஸ்டோக்ஸ் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாக மட்டுமே களமிறங்குவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனால் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாக மட்டும் பென் ஸ்டோக்ஸ் சென்னை அணிக்கு பயனளிப்பாரா என்று கேள்விகள் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்த நிலையில் சென்னை அணியின் புதிய வரவான ரஹானே, பென் ஸ்டோக்ஸ் பற்றி பேசியுள்ளது கருத்து எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
பென் ஸ்டோக்ஸ் பற்றி ரஹானே பேசுகையில், “கேப்டன் தோனி பென் ஸ்டோக்ஸை எப்படி பயன்படுத்தப் போகிறார் என்பதை அனைவரும் இன்று பார்க்க போகிறீகள். அது தோனிக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். பென் ஸ்டோக்ஸை எப்படி பயன்படுத்த வேண்டுமோ, அப்படி தோனி பயன்படுத்துவார்.
அதேபோல், ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை அதிகமாக தொடக்க வீரராகவே களமிறங்கியுள்ளேன். சென்னை அணியிலும் அதையே தொடர்வேன் என்று நினைக்கிறேன். ஆனால் தோனியும், அணி நிர்வாகமும் வேறு ரோல் கொடுத்தால் நிச்சயம் ஏற்றுக் கொள்வேன். தோனி தலைமையின் கீழ் நிறைய ஆண்டுகள் இந்திய அணிக்காக ஆடி இருக்கிறேன். ஆனால் சிஎஸ்கே அணியில் இதுதான் முதல்முறை. அந்த வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now