
Rahim, Das To Miss Upcoming Series Against Australia (Image Source: Google)
ஆஸ்திரேலிய அணி அடுத்த மாதம் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி ஆகஸ்ட் 3ஆம் தேதி டாக்காவில் நடைபெறவுள்ளது..
இதற்கான ஆஸ்திரேலிய அணி நாளைய தினம் வெஸ்ட் இண்டீஸிலிருந்து தனி விமானம் மூலம் வங்கதேசம் செல்லவுள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கான வங்கதேச அணியிலிருந்து நட்சத்திர வீரர்கள் முஸ்பிக்கூர் ரஹிம், லிட்டன் தாஸ் ஆகியோர் விலகியுள்ளதாக வங்கதேச கிரிக்கெட் வாரியத்தில் அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.