சச்சின், டி காக் வரிசையில் இணைந்த ரஹ்மனுல்லா குர்பாஸ்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 22 வயதில் அதிக சதமடித்த வீரர்கள் பட்டியலில் ஆஃப்கானிஸ்தானின் ரஹ்மனுல்லா குர்பாஸ், சச்சின் டெண்டுல்கர், குயின்டன் டி காக் ஆகியோரது சாதனைகளை சமன்செய்துள்ளார்.
ஆஃப்கானிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வந்தது. இத்தொடரின் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணியானது 2-1 என்ற கணக்கில் வங்கதேச அணியை வீழ்த்தி ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று ஷார்ஜாவில் நடைபெற்ற நிலையில், இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியானது 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 244 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக மஹ்முதுல்லா 98 ரன்களையும், மெஹிதி ஹசன் 66 ரன்களையும் சேர்த்தனர். ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Trending
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியானது ரஹ்மனுல்லா குர்பாஸின் சதத்தின் மூலம், அஸ்மதுல்லா ஒமர்ஸாயின் அரைசதத்தின் மூலமும் 48.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது. இதில் அதிகபட்சமாக ரஹ்மனுல்லா குபாஸ் 101 ரன்களையும், அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 70 ரன்களையும் சேர்த்து ஆஃப்கானிஸ்தான் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.
இந்நிலையில் இப்போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரரான ரஹ்மனுல்லா குர்பாஸ் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 8ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 22வயதில் அதிக சதங்களை அடித்த வீரர்கள் வரிசையில், இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் குயின்டன் டி காக் ஆகியோரது சாதனைகளை சமன்செய்து அசத்தியுள்ளார்.
Rahmanullah Gurbaz!! pic.twitter.com/hWMoXYT6R2
— CRICKETNMORE (@cricketnmore) November 11, 2024முன்னதாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் குயின்டன் டி காக் ஆகியோர் 22வயதில் தலா 8 ஒருநாள் சதங்களை அடித்து சாதனை படைத்த நிலையில், அதனைத் தற்போது ரஹ்மனுல்லா குர்பாஸ் சமன்செய்துள்ளார். இந்த பட்டியலில் விராட் கோலி 7 சதங்களுடன் இரண்டாம் இடத்தையும், பாகிஸ்தானின் பாபர் ஆசாம், இலங்கையின் உபுல் தரங்கா ஆகியோர் தலா 6 சதங்களுடன் மூன்றாம் இடத்தையும் பகிர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
22 அல்லது அதற்கு குறைவான வயதில் அதிக ஒருநாள் சதங்கள் அடித்த வீரர்கள்
- 8* - ரஹ்மானுல்லா குர்பாஸ் (46 இன்னிங்ஸ்), ஆஃப்கானிஸ்தான்
- 8 - குயின்டன் டி காக் (52 இன்னிங்ஸ்), தென் ஆப்பிரிக்கா
- 8 - சச்சின் டெண்டுல்கர் (113 இன்னிங்ஸ்), இந்தியா
- 7 - விராட் கோலி (66 இன்னிங்ஸ்), இந்தியா
- 6 - பாபர் அசாம் (32 இன்னிங்ஸ்), பாகிஸ்தன்
- 6 - உபுல் தரங்கா (62 இன்னிங்ஸ்), இலங்கை
Win Big, Make Your Cricket Tales Now