
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. அதனால், இலங்கை அணியுடனான 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஷிகர் தவான் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி சென்றுள்ளது.
இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் ஜாம்பவான் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டு இலங்கைக்கு சென்றுள்ளார். ஒரு கிரிக்கெட் வீரராக இந்திய அணிக்காக சிறப்பான பங்களிப்பு செய்து பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்த ராகுல் டிராவிட், இந்திய அண்டர் 19 அணியின் பயிற்சியாளராக இருந்து பல இளம் வீரர்களை உருவாக்கி கொடுத்துள்ளார்.
இதன் காரணமாக தான் இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்படலாம் என்பதற்கான சமிக்ஞையாகத்தான் தற்போது அவருக்கு பயிற்சியாளராக பதவி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சில கருத்துகள் வெளியாகி வருகின்றனர்.