
எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவி உள்ளது. இதன் மூலம் 2-2 என்ற கணக்கில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகள் பெற்று இந்த தொடர் சமனில் முடிந்துள்ளது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்தாலோ அல்லது சமன் செய்திருந்தால் கூட இந்த டெஸ்ட் தொடரை வென்றிருக்கும்.
இந்த நிலையில் தோல்விக்கு பிறகு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட். அப்போது அஸ்வினை ஆடும் லெவனில் சேர்க்காததால் இந்திய அணி வெற்றிக்ககான யுக்தியை மிஸ் செய்துவிட்டதா? என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த டிராவிட், "அஸ்வின் போன்றதொரு வீரரை ஆடும் லெவனில் சேர்க்காமல் இருப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஆனால் முதல் நாள் அன்று காலை ஆடுகளத்தை நாங்கள் பார்வையிட்ட போது அதில் புற்கள் அதிக நிறைந்திருந்தது. அதே நேரத்தில் வேகப்பந்து வீச்சாளருக்கு விக்கெட் சாதகமாக இருக்கும் என நாங்கள் கருதினோம். அதனால் கடந்த காலங்களில் இது மாதிரியான சூழல்களில் சிறப்பாக செயல்பட்டவர் என்ற பார்வையில் ஷர்துல் தாக்கூருக்கு நாங்கள் வாய்ப்பு கொடுத்தோம்" என தெரிவித்துள்ளார் திராவிட்.