
Rahul Dravid praises opponent team amidst the T20I in jaipur (Image Source: Google)
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் ஆக பொறுப்பு எடுத்துள்ளார் ராகுல் டிராவிட். டிராவிட் பயிற்சியின் கீழ் முதல் முறையாக இந்திய அணி இன்று நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடுகிறது.
புதிய பயிற்சியாளர் ஆக டிராவிட்டும் அணியின் புதிய கேப்டனாக ரோஹித் சர்மாவும் நேற்று இணைந்து அதிகாரப்பூர்வமாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பல விதமான கேள்விகளுக்கும் ரோகித், டிராவிட் இருவரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வந்தனர்.
இதில் ஒரு கேள்வியாக ராகுல் டிராவிட்டிடம், “இந்திய அணியை எதிர்கொள்ளும் நியூசிலாந்து அணியை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு நிதானமாக பதில் அளித்த டிராவிட், நியூசிலாந்து அணியை சிறந்த கிரிக்கெட் அணியாக புகழ்ந்தார்.