
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா - நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன. இரு அணிகள் இடையேயான இறுதி போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் லார்ட்ஸ் மைதாத்தில் ஜூன் 18ஆம் தேதி முதல் ஜூன் 22ஆம் தேதி வரை நடைபெறும் என ஏற்கனவே ஐசிசி அறிவித்துள்ளது.
இறுதி போட்டிக்கான இந்திய அணியை, பிசிசிஐ., கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது. அதன்படி இந்திய அணியில் முகமது சிராஜ், ஷர்துல் தாகூர், வாசிங்டன் சுந்தர் போன்ற இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு கிடைத்திருந்தாலும், சீனியர் வீரர்களான புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ் போன்ற வீரர்களின் பெயர்கள் இடம்பெறாதது புதிய விவாதத்தை ஏற்படுத்தியது.
புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவை அணியில் எடுக்காதது மிக தவறான முடிவு என முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில், குல்தீப் யாதவ் அணியில் நிச்சயம் இடம் பிடித்திருக்க வேண்டும் என முன்னாள் வீரரான ராகுல் டிராவிட்டும் தெரிவித்துள்ளார்.