
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து, ஜூன் 18 முதல் 22 ஆம் தேதி வரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும், அப்படியே இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடுகிறது.
இதற்கிடையில் இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ஆனால் இத்தொடரின் போது இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் அனைவரும் இங்கிலாந்தில் இருப்பார்கள் என்பதால், இலங்கை தொடருக்கு புதிய அணியை பிசிசிஐ அனுப்பவுள்ளது.
அதன்படி இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியில், ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், புவனேஷ்வர் குமார், ஹர்திக் பாண்டியா ஆகியோருடன் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், பிரித்வி ஷா உள்ளிட்ட வீரர்களை கொண்ட அணி இலங்கையை எதிர்கொள்ளும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.