
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற வீரர்களுக்கான இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் 2025 தொடரில் நேற்று நடைபெற்ற 7ஆவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா - இந்தியா மாஸ்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. வதோதராவ்வில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா மாஸ்டர்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க மாஸ்டர்ஸ் அணியில் ஹென்றி டேவிட்ஸ் 38 ரன்களையும், டேன் விலாஸ் 28 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் அந்த அணி 85 ரன்களில் ஆல் அவுட்டானது. இந்திய மாஸ்டர்ஸ் அணி தரப்பில் ராகுல் ஷர்மா ஹாட்ரிக் விக்கெட்டுகாளுடன் 3 விக்கெட்டுகளையும், யுவராஜ் சிங் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய மாஸ்டர்ஸ் அணியில் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் 6 ரன்னிலும், அடுத்து களமிறங்கிய இர்ஃபான் பதன் 13 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த அம்பத்தி ராயுடு - பவன் நெகி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன், ஸ்கோரை உயர்த்தினர்.