
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்ப்ரிக்க அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. இதில் ஐபிஎல் தொடரில் கலக்கிய இளம் வீரர்களுக்கு நடைபெற்று வரும் இத்தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது.
அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அடுத்ததாக இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அயர்லாந்து அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது.
இந்த தொடருக்கு முன்னதாக முதன்மை வீரர்களைக் கொண்ட இந்திய அணி இங்கிலாந்து சென்று ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட இருப்பதால் அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரிலும் இளம் வீரர்களைக் கொண்ட இரண்டாவது அணியே விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று பிசிசிஐயின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.