
Rain Frustrates England And New Zealand As Third Day Of 1st Test Washed Out (Image Source: Google)
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 378 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இன்னிங்ஸை முடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டேவன் கான்வே 200 ரன்களைச் சேர்த்தார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் சேர்த்திருந்தது. அந்த அணியின் ரோரி பர்ன்ஸ் 59 ரன்களுடனும், ஜோ ரூட் 42 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.