
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையே நடந்து முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியானது 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்தது.
இந்நிலையில் ராபில்பிண்டியில் கனமழை பெய்து வருவதன் காரணமாக இப்போட்டியின் டாஸ் நிகழ்வானது தடைபட்டது. அதன்பின் தொடர்ந்து மழை நீடித்த காரணத்தாலும், மைதானம் முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளதாலும் இப்போட்டியின் முதல் நாள் ஆட்டமானது டாஸ் வீசப்படாமல் முழுவதுமாக கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து நாளை இரண்டாம் நாள் ஆட்டத்தில் டாஸ் நிகழ்வு நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இத்தொடரில் ஏற்கெனவே வங்கதேச அணி வெற்றிபெற்றுள்ள நிலையில், இப்போட்டியானடி டிராவில் முடிவடைந்தாலும் வங்கதேச அணியானது தொடரை வென்று சாதனை படைக்கும். அதேசமயம், பாகிஸ்தான் அணி இப்போட்டியில் நிச்சயம் வெற்றிபெற்றால் மட்டுமே தொடரை சமன்செய்ய முடியும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.