Advertisement

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய அறிவிப்பு; மகிழ்ச்சியில் உள்ளூர் மக்கள்!

ஆர்சிபி - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டியில் அடிக்கும் ஒவ்வொரு சிக்ஸருக்கும் 6 வீடுகளுக்கு சூரிய ஒளி மின் இணைப்பு வழங்கப்படும் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய அறிவிப்பு; மகிழ்ச்சியில் உள்ளூர் மக்கள்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய அறிவிப்பு; மகிழ்ச்சியில் உள்ளூர் மக்கள்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 06, 2024 • 01:46 PM

இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ஒவ்வொரு அணிகளும் போட்டி போட்டு வெற்றியை ஈட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று நடைபெறும் 19ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
April 06, 2024 • 01:46 PM

இதில் ஆர்சிபி அணி நடப்பு ஐபிஎல் சீசனில் விளையாடிய நான்கு போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளதால் இப்போட்டியில் வெற்றிபெற்று மீண்டும் புள்ளிப்பட்டியலில் முன்னேறும் நோக்கிலும், மறுபக்கம் நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை தோல்வியைத் தழுவாமால் தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளை பெற்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தங்களது வெற்றி கணக்கை தொடரும் முனைப்பிலும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Trending

இந்நிலையில், இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புதிய ஜெர்சியுடன் களமிறங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான புதிய ஜெர்சி அறிமுகப்படுத்தும் விழா நேற்றைய தினம் நடைபெற்றது. அதில் ராஜஸ்தானில் உள்ள கிரமப்புர மகளிருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் முழுவதும் இளஞ்சிவப்பு நிறத்தால் ஆன ஜெர்சியை அணிந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிகழ்ச்சியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கூடுதல் அறிவிப்பு ஒன்றையும் அறிவித்தது. அதன்படி இந்த போட்டியில் அடிக்கும் ஒவ்வொரு சிக்ஸருக்கும் 6 வீடுகளுக்கு சூரிய ஒளி மின் இணைப்பு வழங்கப்படும் எனவும் ராஜஸ்தான் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அம்மாநில மக்கள் வரவேற்றுள்ளனர். மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement