ஐபிஎல் 2021: ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 43ஆவது லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 43ஆவது லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதில் வெற்றி பெறும் அணி பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்கும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Trending
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் -ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
- இடம் - துபாய் சர்வதேச மைதானம், துபாய்
- நேரம் - இரவு 7.30 மணி
போட்டி முன்னோட்டம்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சஞ்சு சாம்சன் ஒருவரை மட்டுமே பேட்டிங்கில் நம்பியுள்ளது. ஏனெனில் அவரைத் தவிர மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் சோபிக்காததால் அந்த அணி பேட்டிங் சற்று பின்னடைவைச் சந்தித்துள்ளது.
மேலும் யஷஸ்வி ஜெய்ஸ்வால், மஹிபால் லமோர் ஆகியோர் ஓரளவு சிறப்பாக விளையாடுவது அணிக்கு நம்பிக்கையளிக்கிறது. அதேசமயம் பந்துவீச்சில் முஸ்தபிசூர், கார்திக் தியாகி, மயாங்க் மார்கண்டே இருப்பது அணிக்கு சற்று பலத்தை கூட்டியுள்ளது.
விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடந்த போட்டியில் மும்பையை வீழ்த்திய வெற்றி உற்சாகத்துடன் களமிறங்கவுள்ளது.
மேலும் பேட்டிங்கில் மேக்ஸ்வெல், ஸ்ரீகர் பரத் ஆகியோரும் அதிரடியாக விளையாடுவது அணியின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. அதேபோல் பந்துவீச்சில் ஹர்ஷல் படேல் அபாரமான ஃபார்மில் உள்ளதால் ஆர்சிபி அணியின் வெற்றி நிச்சயம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 22
- ராஜஸ்தான் வெற்றி - 10
- பெங்களூரு வெற்றி - 11
உத்தேச அணி
ராஜஸ்தான் ராயல்ஸ் - எவின் லூயிஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கே), லியாம் லிவிங்ஸ்டோன், மஹிபால் லோமோர், ரியான் பராக்/ மனன் வோரா, ராகுல் திவேத்தியா, கிறிஸ் மோரிஸ், சேத்தன் சகாரியா, ஜெய்தேவ் உனட்கட்/ மயங்க் மார்கண்டே, முஸ்தாபிசூர் ரஹ்மான்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - விராட் கோலி (கே), தேவ்தத் படிக்கல், ஸ்ரீகர் பாரத்/ முகமது அசாருதீன், கிளென் மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ், ஷாபாஸ் அகமது, டேனியல் கிறிஸ்டியன், கைல் ஜேமீசன், ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர்கள் - சஞ்சு சாம்சன்
- பேட்டர்ஸ் - ஏபி டிவில்லியர்ஸ், விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், லியாம் லிவிங்ஸ்டன், மஹிபால் லோமோர்
- ஆல் -ரவுண்டர்கள் - க்ளென் மேக்ஸ்வெல், கிறிஸ் மோரிஸ்
- பந்துவீச்சாளர்கள் - யுஸ்வேந்திர சாஹல், ஹர்ஷல் பட்டேல், சேத்தன் சகாரியா
Win Big, Make Your Cricket Tales Now