
சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற மூன்றாவது காலிறுதிச்சுற்று ஆட்டத்தில் சௌராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆலுரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மத்திய பிரதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய சௌராஷ்டிரா அணிக்கு ஹர்விக் தேசாய் - தரங் கோயல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தரங் கோயல் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, ஹர்விக் தேசாயும் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய பிரெரக் மான்கட் 16 ரன்களுக்கும், விஷ்வராஜ் ஜடேஜா 15 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
அதன்பின் களமிறங்கிய சிராஜ் ஜானி அதிரடியாக விளையாடி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன் அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். ஆனால் மறுமுனையில் களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இறுப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சிராஜ் ஜானி 8 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 80 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷங்கைக் கொடுத்தனர்.