-mdl.jpg)
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த இசான் அணியின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அவரது பதவிக்காலத்தை நீட்டிக்க அப்போதைய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய புரவலரும், பிரதமருமான இம்ரான் கான் விரும்பவில்லை.
இதனனையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய புதிய தலைவராக முன்னாள் கேப்டனும், வர்ணனையாளருமான ரமீஸ் ராஜா நியமிக்கப்பட்டார். இதன் பின்னர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ரமீஸ் ராஜா பிசிபி தலைவராக செயல்பட்டு வருகிறார்.
பிசிபி தலைவராக ரமீஸ் ராஜா 3 ஆண்டுகள் செயல்படுவார் என்று கூறப்பட்ட நிலையில், திடீரென ரமீஸ் ராஜா நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவரான நஜாம் சேதி நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் நஜான் சேதி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் உடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்.