ரஞ்சி கோப்பை 2024: கம்பேக் போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய புவனேஷ்வர் குமார்!
பெங்கால் அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் உத்திரபிரதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
இந்தியாவில் நடைபெற்று வரும் ரஞ்சிக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடரில் ஜனவரி 12ஆம் தேதி தொடங்கிய நிலையில், இத்தொடரின் லீக் போட்டியில் உத்தரபிரதேசம் மற்றும் பெங்கால் அணிகள் மோதி வருகின்றன. கான்பூரில் தொடங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்கால் முதலில் பந்து வீசுவதாக தொடர்ந்து களமிறங்கிய உத்திரபிரதேசம் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் 60 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அந்த அணிக்கு முக்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டான நிலையில் அதிகபட்சமாக சமர்த் சிங் 13 ரன்கள் எடுத்தார். பந்து வீச்சில் மிரட்டிய பெங்கால் சார்பில் அதிகபட்சமாக முகமது கைஃப் 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய பெங்கால் அணிக்கு நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் தன்னுடைய அனுபவத்தை பயன்படுத்தி ஆரம்பத்திலேயே பெரிய சவாலை கொடுத்தார்.
Trending
குறிப்பாக புதிய பந்தை ஸ்விங் செய்து அச்சுறுத்தலை கொடுத்த அவருடைய வேகத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சௌரவ் பால் 13, சுதீப் கராமி 0, கேப்டன் மனோஜ் திவாரி 3, மஜும்தார் 12, அபிஷேக் போரேல் 12 என முக்கிய பேட்ஸ்மேங்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இதனால் முதல் நாளிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய பெங்கால் 2ஆவது நாளிலும் துல்லியமாக பந்து வீசிய புவனேஸ்வர் குமார் வேகத்தில் ஷ்ரேயான்ஸ் கோஸ் 41, பிரதீபா பர்மனிக் 1, சிந்து ஜெய்ஸ்வால் 20 ரன்களில் அவுட்டானார்கள்.
இறுதியில் முகமது கைஃப் அதிகபட்சமாக 45 ரன்கள் எடுத்து போராடியும் பெங்காலை 188 ரன்களுக்கு சுருட்டிய உத்தர பிரதேசம் சார்பில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 8 விக்கெட்டுகளை சாய்த்தார். குறிப்பாக 22 ஓவர்களில் 5 மெய்டன் உட்பட வெறும் 41 ரன்கள் மட்டுமே கொடுத்த அவர் 8 விக்கெட்களை 1.86 என்ற துல்லியமான எக்கனாமியில் எடுத்து பெங்காலை தனி ஒருவனாக சாய்த்தார் என்றே சொல்லலாம்.
ஒரு கட்டத்தில் 3 வகையான இந்திய அணியிலும் முதன்மை பவுலராக இருந்த அவர் 2018 தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் காயமடைந்தார். அதிலிருந்து குணமடைந்து ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வந்த அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த தவறியதால் இந்திய அணியில் தற்போது கழற்றி விடப்பட்டுள்ளார்.
இருப்பினும் 6 வருடங்கள் கழித்து முதல் முறையாக ரஞ்சிக் கோப்பையில் தற்போது விளையாடும் புவனேஸ்வர் குமார் முதல் போட்டியிலேயே 8 விக்கெட்டுகள் எடுத்துள்ள தாம் இன்னும் சோடை போகவில்லை என்பதை மீண்டும் காண்பித்துள்ளார். அதனால் பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான் போன்ற ரன்களை வாரி வழங்கும் பவுலர்களுக்கு பதிலாக இவரை டெஸ்ட் அணியில் தேர்வு செய்யுங்கள் என்று ரசிகர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
Win Big, Make Your Cricket Tales Now