
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று தொடங்கிய லீக் ஆட்டம் ஒன்று அருணாச்சலப் பிரதேசம் மற்றும் ஹைத்ராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைத்ராபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த அருணாச்சலப் பிரதேச அணி 171 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அந்த அணியில் அதிகபட்சமாக டெக்கி டோரியா 97 ரன்களைச் சேர்த்தார். ஹைதராபாத் அணி தரப்பில் கார்த்திகேயா, மிலாந்த் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஹைத்ராபாத் அணிக்கு தன்மய் அகர்வால் - கேப்டன் கஹ்லாத் ராகுல் சிங் இணை ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணி பந்துவீச்சை சிதறடித்தனர்.
அருணாச்சல பிரதேச வீரர்கள் வீசிய ஓவ்வொரு ஓவருக்கும் பவுண்டரியும், சிக்சர்களுமாக பறக்கவிட்ட இந்த அணி முதல் விக்கெட்டிற்கு 345 ரன்கள் என்ற இமாலய பார்ட்னர்ஷிப்பை அமைத்து மிரட்டினர். இதில் இரட்டை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கஹ்லாத் ராகுல் சிங் 26 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 185 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.