ரஞ்சி கோப்பை 2022: மணிப்பூர், கேரளா, ராஜஸ்தான் அணிகள் வெற்றி!
இந்தியாவின் முதன்மையான உள்ளூர் முதல்தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் 38 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்தியாவின் முதல்தர கிரிக்கெட்டான ரஞ்சி கோப்பை தொடர் கடந்த 17 ஆம் தேதி தொடங்கியது. 38 அணிகளுக்கு இடையில் 19 போட்டிகள் தொடங்கின. ஒரு போட்டியில் அருணாச்சல பிரதேசம்- மணிப்பூர் அணிகள் மோதின. இதில் மணிப்பூர் இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மற்றொரு ஆட்டத்தில் கேரளா- மேகாலயா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த மேகாலயா 148 ரன்னில் சுருண்டது. பின்னர் கேரளா 9 விக்கெட் இழப்பிற்கு 505 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. 2ஆவது இன்னிங்சில் மேகாலயா 191 ரன்னில் சுருண்டது. இதனால் கேரளா இன்னிங்ஸ் மற்றும் 166 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Trending
ஜம்மு&காஷ்மீர்- புதுச்சேரி இடையிலான ஆட்டம் சென்னையில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் புதுச்சேரி 343 ரன்கள் சேர்த்தது. ஜம்மு-காஷ்மீர் 426 ரன்கள் குவித்தது. பின்னர் 2ஆவது இன்னிங்சில் புதுச்சேரி 124 ரன்கள் சுருண்டது. இதனால் ஜம்மு-காஷ்மீர் 2 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ராஜஸ்தான்- ஆந்திர பிரதேசம் இடையிலான போட்டியில் ராஜஸ்தான் 158 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் முதல் இன்னிங்சில் 127 ரன்களும், ஆந்திரா 224 ரன்களும் எடுத்தது. ராஜஸ்தான் 2-வது இன்னிஙசில் 316 ரன்கள் குவித்தது. ஆந்திரா 209 ரன்னில் ஆல்அவுட் ஆகி 158 ரன்னில் தோல்வியை சந்தித்தது.
சர்வீசஸ்- உத்தரகாண்ட் இடையிலான ஆட்டத்தில் உத்தரகாண்ட் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சர்வீசஸ் முதல் இன்னிங்சில் 176 ரன்னில் சுருண்டது. உத்தரகாண்ட் 248 ரன்கள் சேர்த்தது. 2ஆவது இன்னிங்சில் சர்வீசஸ் 204 ரன்னில் ஆல்அவுட் ஆனது. உத்தரகாண்ட் இலக்கை 1 விக்கெட் மட்டுமே இழந்து எட்ட 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Win Big, Make Your Cricket Tales Now