ரஞ்சி கோப்பை 2025: விதர்பா 383 ரன்களில் ஆல் அவுட்; பேட்டிங்கில் தடுமாறும் மும்பை!
விதர்பா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் மும்பை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்களைச் சேர்த்துள்ளது.

இந்தியாவின் பாரம்பரிய மிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை தொடரின் 2024-25ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று தொடங்கிய இரண்டாவது அரையிறுதி போட்டியில் விதர்பா மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற விதர்ப அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய விதர்பா அணியில் தொடக விரர்கள் சோபிக்க தவறிய நிலையில் அடுத்து களமிறங்கிய துருவ் ஷோரே - டேனிஷ் மாலேவார் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், இருவரும் தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினர். பின்னர் 9 பவுண்டரிகளுடன் 74 ரன்களைச் சேர்த்த கையோடு துருவ் ஷோரே தனது விக்கெட்டை இழந்த நிலையில், அவரைத்தொடர்ந்து 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 79 ரன்களை எடுத்திருந்த நிலையில் டேனிஷ் மாலேவாரும் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கருண் நாயர் மற்றும் யாஷ் ரத்தோட் இணை சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.
Trending
இதில் 45 ரன்கள் எடுத்த கையோடு கருண் நாயர் தனது ஆட்டமிழந்தார். இதனால் விதர்பா அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 308 ரன்களைச் சேர்த்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை யாஷ் ரத்தோட் 47 ரன்களுடனும், அக்ஷய் வத்கர் 13 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில், யார்ஷ் ரத்தோட் அரைசதம் கடந்த நிலையில், 54 ரன்களில் விக்கெட்டை இழக்க, 34 ரன்களுடன் அக்ஷய் வத்கரும் ஆட்டமிழந்தார். இதனால் விதர்பா அணி முதல் இன்னிங்ஸில் 383 ரன்களைச்ச் ஏர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.
மும்பை அணி தரப்பில் ஷிவம் தூபே 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய மும்பை அணியில் ஆயுஷ் மத்ரே 9 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஆகாஷ் ஆனந்த் - சித்தேஷ் லத் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஆகாஷ் ஆனந்த் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சித்தேஷ் லத் 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
Also Read: Funding To Save Test Cricket
அதன்பின் களமிறங்கிய கேப்டன் அஜிங்கியா ரஹானே 18 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் ரன்கள் ஏதுமின்றிம், ஷிவம் தூபே ரன்கள் ஏதுமின்றியும் என பார்த் ரேகாடே ஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஷம்ஸ் முலானி 4 ரன்களிலும், அதிரடியாக விளையாடிய ஷர்துல் தாக்கூர் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அன 37 ரன்களில் என விக்கெட்டை இழந்தனர். இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் மும்பை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. இதில் ஆகாஷ் ஆனந்த் 67 ரன்களுடனும், தனுஷ் கோட்டியான் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
Win Big, Make Your Cricket Tales Now