Advertisement

ரஞ்சி கோப்பை 2022: மீண்டும் சதம் விளாசிய இந்திரஜித்!

ஜார்க்கண்ட் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் தமிழக வீரர் பாபா இந்திரஜித் மீண்டும் சதமடித்து அசத்தியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan March 03, 2022 • 20:43 PM
Ranji Trophy: The rise and rise of Baba Indrajith
Ranji Trophy: The rise and rise of Baba Indrajith (Image Source: Google)
Advertisement

இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கௌகாத்தில் தமிழ்நாடு - ஜார்க்கண்ட் அணிகள் மோதின.

இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. எனினும் முதல் 4 விக்கெட்டுகளை 32 ரன்களுக்குள் இழந்து தடுமாறியது. 

Trending


அதன்பிறகு ஜோடி சேர்ந்த பாபா இந்திரஜித் - சாய் கிஷோர் ஜோடி தமிழக அணியின் ஸ்கோர் 200 ரன்களைத் தாண்டும் வரை அற்புதமாக விளையாடியது. இந்த வருட ரஞ்சி கோப்பைப் போட்டியில் தொடர்ச்சியாக 3ஆவது சதமெடுத்து அசத்தினார் இந்திரஜித். 

அவர் 100 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு சாய் கிஷோர் 81 ரன்களிலும் ஷாருக் கான் 20 ரன்களிலும் ஆட்டமிழந்ததால் தமிழ்நாடு மீண்டும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் தமிழக அணி, 72 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்துள்ளது. ஜெகதீசன் 10 ரன்களுடனும், முகமது 4 ரன்களுடனும் களத்தில் உள்ளார்கள். ஜார்க்கண்ட் அணியின் ராகுல் சுக்லா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.  


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement