
இந்தியாவில் விறுவிறுப்பாக தொடங்கியுள்ள 2024 ரஞ்சிக் கோப்பை தொடரின் 5வது லீக் போட்டியில் அசாம் மற்றும் சத்தீஸ்கர் கிரிக்கெட் அணிகள் மோதின. ராய்ப்பூர் நகரில் தொடங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற அசாம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய சத்தீஸ்கர் அணி முதல் இன்னிங்ஸில் போராடி 327 ரன்கள் எடுத்தது.
அந்த அணிக்கு அதிகபட்சமாக அமன்தீப் காரே சதமடித்து 116 ரன்களும், ஷசாங் சிங் 82 ரன்களும் எடுத்த நிலையில் அசாம் சார்பில் அதிகபட்சமாக ஆகாஷ் செங்குப்த்தா மற்றும் முக்தர் ஹுசைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். ஆனால் அதைத் தொடர்ந்து களமிறங்கிய அசாம் ஆரம்பம் முதலே சத்தீஸ்கர் பவுலர்களின் அதிரடியான பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி ஃபாலோ ஆன் பெற்றது.
அந்த அணிக்கு அதிகபட்சமாக டேனிஷ் தாஸ் 52 ரன்கள் எடுத்த நிலையில், சத்தீஸ்கர் சார்பில் அதிகபட்சமாக சௌரப் மஜும்தார் மற்றும் ரவி கிரண் விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 168 ரன்கள் பின் தங்கிய நிலைமையில் ஃபாலோ ஆன் பெற்று பேட்டிங் செய்த அசாம் அணிக்கு ரிசவ் தாஸ் 17, ராகுல் ஹசகிரா 39, கடிகோன்கர் 16 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.