Advertisement

வெளியானது உலகக்கோப்பை ஆந்தம் பாடல்; விமர்சனங்களுடன் வைரல்!

இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஆந்தம் பாடல் இன்று வெளியாகியுள்ளது.    

Bharathi Kannan
By Bharathi Kannan September 20, 2023 • 16:08 PM
வெளியானது உலகக்கோப்பை ஆந்தம் பாடல்; விமர்சனங்களுடன் வைரல்!
வெளியானது உலகக்கோப்பை ஆந்தம் பாடல்; விமர்சனங்களுடன் வைரல்! (Image Source: Google)
Advertisement

இந்தியாவில் அடுத்த மாதம் 5ஆம் தேதி முதல் ஐசிசியின் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் பிரமாண்டமாக தொடங்குகிறது. இந்த தொடரில் நவம்பர் 19ஆம் தேதி வரையில் நடக்கிறது. இதில், இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன. சென்னை, பெங்களூரு உள்ளிட்ட 10 மைதானங்களில் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.

இந்தியா தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி வரும் 8ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் உலகக் கோப்பை தொடருக்கான வீரர்களை அறிவித்துள்ளனர். ஆனால், பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேச அணி மட்டும் இதுவரையில் உலகக் கோப்பைக்கான வீரர்களை அறிவிக்கவில்லை.

Trending


வரும் செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் அக்டோபர் 3 ஆம் தேதி வரையில் உலகக் கோப்பை வார்ம் அப் போட்டி நடக்கிறது. இந்த நிலையில், உலகக் கோப்பைக்கான பாடல் வெளியாகியுள்ளது. இதில், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இடம் பெற்றுள்ளார். மேலும், ப்ரிதம் இசையமைத்துள்ளார். ‘தில் ஜாஷ்ன் போலே’ என்று தொடங்கும் இந்தப் பாடலுக்கு ரன்வீர் சிங் ரயிலில் வந்து பாடல் பாடுவது போன்று காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

 

தில் ஷஸன் போலே என்று தொடங்கும் ஆந்தம் பாடலில் வெறும் ஆட்டமும், பாட்டமும் தான் இருக்கிறதே தவிர, எந்தவித கிரிக்கெட் காட்சிகளும் இடம் பெறவில்லை. மாறாக மொபைலில் அவுட் என்று காண்பிக்கப்படுகிறது. மேலும், ரயிலுக்குள்ளாகவே மைதானம் போன்று காட்டப்பட்டு அதில் கிரிக்கெட் ஆடுவது போன்றும் நடுவர் சிக்ஸர் கொடுப்பது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. 

மேலும், அனைத்து நாடுகளின் கொடிகளும் அந்த ஆந்தம் காணொளியில் இடம் பெற்றுள்ளன. இறுதியாக ஒண்டே எக்ஸ்பிரஸ் என்று டிக்கெட் மாதிரி ஒன்றை ரன்வீர் சிங் எடுத்து கொடுக்கிறார். இந்த பாடலில் பாலிவுட் நடிகர் ரண்வீர் சிங் மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் சாஹலின் மனைவி தனஸ்ரீ வர்மா ஆகியோர் நடித்துள்ளனர். தற்போது இந்த பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement