Advertisement
Advertisement
Advertisement

புஜாராவின் பேட்டிங்கை கடுமையாக விமர்சித்த ரவி சாஸ்திரி!

உங்கள் ஆப் ஸ்டெம்ப் எங்கிருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள் என்று எப்பொழுதும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள் என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan June 09, 2023 • 12:31 PM
Ravi Shastri blasts India's 100-Test veteran for 'not knowing his off-stump'!
Ravi Shastri blasts India's 100-Test veteran for 'not knowing his off-stump'! (Image Source: Google)
Advertisement

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் லண்டனிலுள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 469 ரன்கள் குவித்த நிலையில் இந்திய அணி 151 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

இதில் ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் பந்தில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா வெளியேறியதும் நிலைமைகள் மாறியது. இதற்கு அடுத்து ஸ்காட் போலண்ட் வீசிய பந்தை விட நினைத்து பரிதாபமாக ஸ்டெம்பை பறிகொடுத்து சுப்மன் கில் ஆட்டம் இழந்து 13 ரன்களுக்கு வெளியேறினார். கில் வெளியேறிய அதே முறையில் புஜாராவும் ஆட்டம் இழந்து வெளியேறினார். இது குறித்து ரவி சாஸ்திரி தனது கருத்தை மிகவும் காட்டமாக பதிவு செய்து இருக்கிறார். 

Trending


இதுகுறித்து பேசிய ரவி சாஸ்திரி “முன்கால் பந்தை நோக்கி செல்ல வேண்டும். ஆனால் அது குறுக்கே சென்று விட்டதால் நிலைமை மோசமாகிவிட்டது. முதலில் புஜாரா அந்த பந்தை விளையாடலாமா என்று நினைத்தார். பின்னர் அதை விட்டு விடலாம் என்று முடிவு செய்தார். ஆனால் அப்பொழுது ஆப் ஸ்டெம்ப் வெளியில் தெரிந்தது. அவரது கணிப்பு மிகத் தவறாக இருந்தது.

நாங்கள் இங்கிலாந்தில் பந்தை விட்டு விளையாடுவது பற்றி நிறைய பேசுகிறோம். உங்கள் ஆப் ஸ்டெம்ப் எங்கிருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள் என்று எப்பொழுதும் பேசுகிறோம். ஆனால் இவர்களுக்கு ஆப் ஸ்டெம்ப் எங்கிருக்கிறது என்று தெரியவில்லை. ஷுப்மன் கில் புட் வொர்க்கில் கொஞ்சம் சோம்பேறியாக இருக்கிறார். அவர் இளமையாக இருக்கிறார் இன்னும் கற்றுக் கொள்வார். ஆனால் புஜாரா மிகவும் ஏமாற்றம் அடைவார்.

அவருடைய முன்கால் பந்துக்கும் பந்தை தாண்டியும் சென்றிருக்க வேண்டும். அதனால்தான் உங்கள் ஆப் ஸ்டெம்ப் எங்கிருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள் என்று எப்பொழுதும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement