Advertisement

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை கணித்த முன்னாள் வீரர்கள்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள 15 பேர் அடங்கிய இந்திய அணியை முன்னாள் வீரர்கள் கணித்துள்ளனர்.

Advertisement
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை கணித்த முன்னாள் வீரர்கள்!
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை கணித்த முன்னாள் வீரர்கள்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 16, 2023 • 10:27 PM

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்ற மூன்று வகையான கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்று விளையாடியது. இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றிய வேளையில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை மூன்றுக்கு இரண்டு (3-2) என்ற கணக்கில் இழந்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
August 16, 2023 • 10:27 PM

அதனை தொடர்ந்து பும்ரா தலைமையிலான மூன்றாம் தர இந்திய அணியானது அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கு அடுத்ததாக ரோகித் சர்மா தலைமையிலான முதன்மை இந்தியானது ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

Trending

இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்? என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. ஏனெனில் ஆசிய கோப்பை தொடரில் விளையாடும் பெரும்பாலானோர் உலக கோப்பை தொடருக்காக தேர்வு செய்யப்படுவார்கள்.

இதன் காரணமாக இந்த ஆசிய கோப்பை தொடரில் இடம் பெறும் வீரர்கள் குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. இந்நிலையில் சமூக வலைதளம் மூலமாக வீடியோ கான்பரன்ஸ்ங்கில் இந்திய அணியின் முன்னாள் வீரர்களான ரவி சாஸ்திரி, சந்தீப் பாட்டில், எம்.எஸ்.கே பிரசாத் ஆகியோர் அடங்கிய நான்கு பேர் கொண்ட குழு தற்போது இந்த ஆசிய கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை தேர்வு செய்துள்ளது.

இந்த அணியில் ஷுப்மன் கில், இஷான் கிஷன், விராட் கோலி, ரோஹித் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் பந்துவீச்சில் பும்ரா, சிராஜ், ஷமி, சஹால், குல்தீப் ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர். அதேசமயம் சஞ்சு சாம்சனிற்கு இவர்களது அணியில் இடம் கிடைக்கவில்லை.

முன்னாள் வீரர்கள் தேர்வு செய்த இந்திய அணி: ஷுப்மன் கில், இஷான் கிஷன், விராட் கோலி, ரோஹித் சர்மா, திலக் வர்மா, சூரியகுமார் யாதவ், ஹார்டிக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாகூர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ், ஜஸ்ப்ரீத் பும்ரா.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement