
இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரினை அடுத்து இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நடைபெற உள்ளது. வரும் ஜூன் 9ஆம் தேதி துவங்கும் இந்த டி20 தொடரானது 19ஆஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரின் முதலாவது டி20 போட்டி டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் 9ஆம் தேதி தொடங்க உள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக இந்த தொடரில் கே.எல் ராகுல் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட அணியே களமிறங்குகிறது. ஏற்கனவே இந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்த வேளையில் இந்த தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்கள் இடம் பிடிப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் இருந்து வருகிறது.
இந்நிலையில் இந்த தென் ஆப்பிரிக்க தொடருக்கான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தனது தெரிவினை வெளியிட்டிருக்கிறார்.