WTC 2023: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த ரவி சாஸ்திரி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ள நிலையில் இந்தியா அணியின் பிளேயிங் லெவன் அணியை ரவி சாஸ்திரி அறிவித்து உள்ளார்.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி லண்டனில் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. இதில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. இரண்டு ஆண்டுகள் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளின் அடிப்படையில் இரு அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு ஆர்சிபி அணி முன்னேறாத நிலையில், இன்று விராட் கோலி சிராஜ் உள்ளிட்ட ஏழு பேர் இங்கிலாந்து புறப்பட்டு விட்டனர்.
2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பைக்குப் பின்னர் இந்திய அணி எந்த ஒரு ஐசிசி கோப்பையும் வென்றதில்லை என்ற நீண்ட கால சோகத்துக்கு முடிவு கட்டும் எண்ணத்துடன் ஆட உள்ளது. இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் ஆடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை இந்திய முன்னாள் வீரரும், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான ரவிசாஸ்திரி கணித்துள்ளார்.
Trending
இதில் அவர் தொடக்க ஆட்டக்காரகளாக ரோகித் மற்றும் கில் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். தொடர்ந்து 3,4,5 வது வரிசையில் புஜாரா, கோலி, ரஹானே ஆகியோரும், விக்கெட் கீப்பராக கே.எஸ்.பரத்தையும் தேர்வு செய்துள்ளார். மேலும் ஆல் ரவுண்டர்களாக ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ரவிச்சந்திரன் அஷ்வினையும் தேர்வு செய்துள்ளார்.
அந்த அணியில் பந்து வீச்சாளர்களாக ஷமி மற்றும் சிராஜ் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். வேகப்பந்து வீச்சுக்கு உகந்த இங்கிலாந்து ஆடுகளத்தில் அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரையும் ஒரு சேர அணியில் ஆட வைப்பது குறிப்பிடத்தக்கது.
ரவி சாஸ்திரி தேர்வு செய்துள்ள இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், சட்டேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்கியா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, கே.எஸ்.பரத், ஷர்துல் தாக்கூர், ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி, முகமது சிராஜ்.
Win Big, Make Your Cricket Tales Now