
Ravi Shastri, Rahul Dravid have different styles of motivating players, says Dhawan (Image Source: Google)
ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த அணிக்கு தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ரவி சாஸ்திரி மற்றும் ராகுல் டிராவிட் இருவருக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளதென ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர்,“நான் அனைத்து இளம் வீரர்களுடனும் உரையாடினேன். அவர்களை திறன்கள் குறித்து, எவ்வாறு விளையாட வேண்டும் என்பது குறித்து நான் ஆலோசனைகளை வழங்கி வருகிறேன். அதனால் நாளைய போட்டியை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.