Advertisement

ஹர்பஜன் சிங் சாதனையை முறியடித்த ரவிச்சந்திரன் அஸ்வின்!

சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவிற்காக அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் ஹர்பஜன் சிங்கினை (707) பின்னுக்குத் தள்ளி 2ஆம் இடம் பிடித்து அஸ்வின் சாதனைப் படைத்துள்ளார். 

Advertisement
ஹர்பஜன் சிங் சாதனையை முறியடித்த ரவிச்சந்திரன் அஸ்வின்
ஹர்பஜன் சிங் சாதனையை முறியடித்த ரவிச்சந்திரன் அஸ்வின் (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 15, 2023 • 02:06 PM

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து முதல் டெஸ்ட் போட்டியில் 141 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வெற்றியை இந்தியா பெற்று அசத்தியுள்ளது. இப்போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 150 ரன்கள் எடுத்து சுருண்டது. அந்த அணியின் அறிமுக வீரர் அலிக் அதனஸ் மற்றும் தாக்குப்பிடித்து 47 ரன்கள் எடுத்தார். ரவிச்சந்திரன் அஸ்வின் ஐந்து விக்கட்டுகள் கைப்பற்றினார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
July 15, 2023 • 02:06 PM

அடுத்து விளையாடிய இந்திய அணிக்கு துவக்க வீரராக களம் இறங்கிய அறிமுக வீரர் ஜெய்ஸ்வால் மிகச் சிறப்பாக விளையாடி 171 ரன்கள் எடுத்தார். டெஸ்ட் அறிமுகத்தில் சதம் அடித்த 17 வது இந்திய வீரராக தன் பெயரை பதிவு செய்தார். மேலும் வெளிநாட்டு மண்ணில் துவக்க விக்கட்டுக்கு அதிக பார்ட்னர்ஷிப் சேர்த்தவராகவும் தன் பெயரை பதிவு செய்தார். இது மட்டும் அல்லாமல் அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிக பந்துகளை எதிர்கொண்ட இந்திய வீரராகவும் தனி சாதனையைப் படைத்தார்.

Trending

இதற்கு அடுத்து இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 421 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 130 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி மீண்டும் அதற்கு அளித்தது. ரவிச்சந்திரன் அஸ்வின் ஏழு விக்கெட்டுகள் மீண்டும் வீழ்த்தினார். இந்திய அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல் இன்னிங்ஸில் 5, இரண்டாவது இன்னிங்ஸில் 7 என மொத்தம் 12 விக்கெட்டுகளை அஸ்வின் அசத்தினார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 486 விக்கெட்டுகளும் ஒருநாள், டி20, டெஸ்ட் போட்டிகளில் இணைந்து மொத்தமாக 709 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதன்மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவிற்காக அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் ஹர்பஜன் சிங்கினை (707) பின்னுக்குத் தள்ளி 2ஆம் இடம் பிடித்துள்ளார் அஸ்வின். 

அனில் கும்ப்ளே 953 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அதிக முறை 5 விக்கெட்டுகள் (34 முறை) பட்டியலில் 5ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதில் 67 முறை 5 விக்கெட்டுகளை எடுத்து முரளிதரன் முதலிடத்தில் உள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement