
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் முடிவடைந்த பிறகு வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதற்கட்டமாக விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாகவும் அறிவித்தது.
அந்த அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் கிரேக் பிராத்வையிட் மற்றும் டெக்நரைன் சந்தர்பால் இருவரும் களமிறங்கினர். முதற்கட்டமாக வேகப்பந்துவீச்சாளர்கள் சிராஜ் மற்றும் உனாத்கட் இருவரும் பந்துவீசினர். இருவரையும் நிதானமாக கட்டுக்கோப்புடன் விளையாடி கிரிக்கெட் இழக்காமல் துவக்க ஜோடி பார்த்துக் கொண்டது.
இதனையடுத்து ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச வந்தார். இவரின் சுழற்பந்துவீச்சை தட்டுதடுமாறி விளையாடி வந்த தொடக்க ஜோடி, முதலில் விக்கெட் இழக்காமல் விளையாடியது. இரண்டாவது ஓவரில் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது நேர்த்தியான பந்துவீச்சின் மூலம் டெக்நரைன் சந்தர்பால் விக்கெட்டை போல்ட் செய்து எடுத்தார். இவரது விக்கெட்டை தூக்கி அதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறும் படைத்திருக்கிறார்.