
இந்த முறை இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடைபெற இருப்பதால், இந்த உலகக் கோப்பை தொடரில் பங்கு பெறும் எல்லா அணி நிர்வாகங்களுமே தங்களது அணியில் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும். தற்போது ஒருநாள் கிரிக்கெட் வடிவம் பேட்ஸ்மேன்களுக்கானதாக இருந்தாலும் கூட, இந்திய மைதானங்களில் சுழற்பந்துவீச்சு எடுபடும் என்கின்ற காரணத்தினால், ஒவ்வொரு அணியும் தங்களது விளையாடும் அணியில் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஒரு இடத்தை அதிகமாகவே கொடுக்கும்.
இந்த வகையில் எடுத்துக் கொண்டால் இந்திய அணியில் பிரதான சுழற்பந்துவீச்சாளராக குல்தீப் யாதவ் மற்றும் சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக ரவீந்திர ஜடேஜா இருவரும் உலகக் கோப்பை இந்திய அணிகள் இடம் பெறுவது உறுதி. மேலும் அக்சர் படேல் மற்றும் சாகல் இருவரும் இடம்பெறுவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம். ஆனால் இந்தியாவின் இந்த சுழற்பந்துவீச்சு கூட்டணியில் ஒரு ஆப் ஸ்பின்னர் கூட கிடையாது. இந்த காரணத்தால் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு இந்த முறை டி20 உலக கோப்பையில் திடீரென வாய்ப்பு கிடைத்தது போல் கிடைக்குமா? என்கின்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அதே சமயத்தில் இன்னொரு ஆப் ஸ்பின் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் பெயரும் தற்பொழுது தேர்வு குழுவின் பரிசீலனையில் இல்லை என்பதாகவே தெரிகிறது. இது சம்பந்தமாக நேரடியாக ரவிச்சந்திரன் அஸ்வினிடம் கேட்கப்பட்ட பொழுது, "இதுபோன்ற எதிர்பார்ப்புகளுக்கு மனதில் இடம் கொடுக்க வேண்டாம் என்று நான் எப்பொழுதோ முடிவு செய்து விட்டேன். உலக கோப்பையில் என்னை தேர்வு செய்யாவிட்டால் அது எந்த வகையிலும் என்னை மனதளவில் பாதிப்படைய செய்யாது. ஏனென்றால் அணியை தேர்ந்தெடுப்பது என்னுடைய வேலை கிடையாது.