
ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய டி20 அணி அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் டி20 தொடரை இழந்திருக்கிறது. இந்த தோல்விக்கு அணி தேர்வு மற்றும் ஆன்பீல்ட் கேப்டன்சி இரண்டும் முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த தொடரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் சுழற் பந்துவீச்சில் ஆட்டத்தை சாகல் திருப்பித் தர, அவரையோ அக்சர் படேலையோ மேற்கொண்டு பந்துவீச்சுக்கு பயன்படுத்தாமல் ஹர்திக் பாண்டியா வேகபந்துவீச்சாளர்களிடம் சென்று தோற்றார்.
இதனால் முதல் இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்று வலிமையான முன்னிலையை பெற்றது வெஸ்ட் இண்டீஸ். மேலும் பந்துவீச்சாளர்களை தொடர்ச்சியாக மாற்றி மாற்றி பயன்படுத்துவதில் அவருக்கு பெரிய குழப்பம் இருந்தது. இதையடுத்து இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக பேட்டிங் வரிசை நம்பர் ஏழுடன் முடிவது இருந்தது. முதல் டி20 போட்டியில் இந்திய அணி மிக எளிதாக வென்று இருக்க வேண்டிய நிலையில் இருந்து சில விக்கட்டுகளை விட்டது. இதன் காரணமாக நம்பர் எட்டில் இருந்த பேட்ஸ்மேன் ஆட்டத்தை முடிக்க வேண்டிய தேவை இருந்தது.
ஆனால் அந்த இடத்தில் பேட்ஸ்மேன் இல்லாத காரணத்தால் ஆட்டம் கையை விட்டு போய்விட்டது. இது குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிடும் கவலை தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.