
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனுக்கான வீரர்களின் ஏலம் டிசம்பர் 23 அன்று நடைபெறுவதால் அனைத்து அணிகளும் நேற்று தாங்கள் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன. இதில் கேன் வில்லியம்சன், டுவை பிராவோ, மயங்க் அகர்வால் உள்ளிட்ட பல பிரபல வீரர்கள் தங்களது அணியால் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த வரிசையில் ராஜஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை அந்த அணி விடுவிக்கவுள்ளதாகச் சமூகவலைத்தளங்களில் தகவல் சொல்லப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக அஸ்வினைத் தக்கவைத்துக்கொண்டது ராஜஸ்தான் அணி.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அஸ்வின், “ராஜஸ்தான் அணி என்னை விடுவிக்க இருப்பதாக ட்விட்டரில் சொன்னார்கள். நிறைய பேர் அப்படிக் காலையில் சொன்னார்கள். சிலர் என்னை அழைத்து, ராஜஸ்தான் அணி உங்களை விடுவித்ததற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் என்றுகூடச் சொன்னார்கள். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.