
இந்தியா - இங்கிலாந்து இடையேயான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை குவித்தது. 98 ரன்களுக்கே கோலி, புஜாரா, கில், விஹாரி, ஷ்ரேயாஸ் ஆகிய 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது இந்திய அணி.
அதன்பின்னர் ரிஷப் பண்ட்டும் ஜடேஜாவும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி 6வது விக்கெட்டுக்கு 222 ரன்களை குவித்தனர். 89 பந்தில் சதமடித்த ரிஷப் பந்த் 111 பந்தில் 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட் அபாரமாக ஆடினாலும், அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து அவருடன் இணைந்து ஜடேஜா ஆடிய இன்னிங்ஸ் மிக முக்கியமானது.
ரிஷப் பந்தை தொடர்ந்து ஜடேஜாவும் சதமடித்தார். 104 ரன்களை குவித்து ஜடேஜா ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட் - ஜடேஜாவின் சதங்கள் தான் இந்திய அணி 400 ரன்களை கடக்க உதவியது. கடைசி நேரத்தில் பும்ரா 31 ரன்கள் பங்களிப்பு செய்ய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை குவித்தது.