-lg1-mdl.jpg)
வெஸ்ட் இண்டீஸ் எதிரான ஒரு நாள் தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரை தொடர்ந்து ஜடேஜாவும் ஒரு மாஸ் சாதனையை படைக்க இருக்கிறார்.இந்திய அணியின் முக்கிய வீரராக விளங்கும் ஜடேஜா பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் மிகவும் பிரம்மாண்ட சாதனைகளை படைத்து வருகிறார். குறிப்பாக இந்திய அணியின் பல வெற்றிக்கு ஜடேஜா முக்கிய காரணமாக இருக்கிறார்.
தற்போது உள்ள காலகட்டத்தில் கூட இந்திய அணியில் சமநிலைக்கு ஜடேஜாவின் பங்கு பெரும் முக்கியத்துவம் ஆகும். அதேபோல், பேட்டிங்கிலும் மாஸ் காட்டும் ஜடேஜா அணியின் ஏழாவது வீரராக களம் இறங்கி பெரிய ஷார்ட்டுகளை விளையாடும் வல்லமையை உடையவர். மேலும் பந்து வீச்சிலும் 10 ஓவர்களை வீசி ரன்களை கட்டுப்படுத்துவதோடு முக்கிய விக்கெட்களையும் எடுக்க கூடியவர்.
இந்திய அணி உலக கோப்பையில் இம்முறை வெல்ல வேண்டும் என்றால் அதற்கு ஜடேஜா தன்னுடைய முழு திறமையையும் வெளிப்படுத்த வேண்டும். பேட்டிங், பந்துவீச்சு மட்டும் இல்லாமல் ஃபீல்டிங்கிலும் ஜடேஜாவின் மாஸ் குறித்து நாம் சொல்லித் தெரிய தேவை இல்லை.