
நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இன்று இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிராக புனே மைதானத்தில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ர வங்கதேச அணியின் புதிய கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ தங்கள் அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.
இதையடுத்து களமிறங்கிய வங்கதேசஅணியின் தொடக்கம் ஆட்டக்காரர்கள் தன்ஸித் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் இருவரும் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் கொண்டு வந்தார்கள். அதன்பின் தன்ஸித் ஹசன் 51, லிட்டன் தாஸ் 66 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள்.
அதன்பின் வங்கதேச அணிக்கு முஸ்பிக்கூர் ரஹீம் 36, மஹ்மதுல்லா 48 மட்டுமே குறிப்பிட தகுந்த ரன்கள் எடுத்தார்கள். மற்ற யாரும் சரியான ரன் பங்களிப்பை வங்கதேச அணிக்கு தரவில்லை. இதனால் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு வங்கதேச அணி 256 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா, பும்ரா, சிராஜ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்,