சர்ஃப்ராஸை ரன் அவுட் செய்த ரவீந்திர ஜடேஜா; கோபத்தில் கொந்தளித்த ரோஹித் சர்மா!
தனது அறிமுக போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்ஃப்ராஸ் கானை சக வீரர் ரவீந்திர ஜடேஜா ரன் அவுட் செய்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

சர்ஃப்ராஸை ரன் அவுட் செய்த ரவீந்திர ஜடேஜா; கோபத்தில் கொந்தளித்த ரோஹித் சர்மா! (Image Source: Google)
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டின் செய்த இந்திய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்களைச் சேர்த்துள்ளது. இப்போட்டியில் இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில் மற்றும் ராஜத் பட்டிதார் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
இந்நிலையில் மறுப்பக்கம் ரவீந்திர ஜடேஜா தனது சதத்தைப் பதிவுசெய்யும் முனைப்பில் இருந்தார். அப்போது ஆட்டத்தின் 82ஆவது ஓவரில் ரவீந்திர ஜடேஜா பந்தை அடித்துவிட்டு ஓடுவது போல் கிரீஸை விட்டு வெளியே வந்தார். இதனால் மறுபக்கம் இருந்த சர்ஃப்ராஸ் கானும் ஓட முயற்சித்த நிலையில், ஜடேஜா ஓடுவதை விட்டு பின் வாங்கினார். இதனை சற்றும் எதிர்பாராத சர்ஃப்ராஸ் கான் மீண்டும் க்ரீஸுக்குள் நுழைய முற்பட்டார்.
Rohit Sharma was very angry with that Run out
— Simran
What an Incredible inning by #SarfarazKhan in his debut Match .#ENGvsIND #INDvsENGTest pic.twitter.com/xcCJCABLUt
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News